மத மோதலை உருவாக்க முயற்சி - பா.ஜ.க. எம்.பி மீது வழக்கு

மதத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவினர் இடையே மோதலை உருவாக்க முயற்சித்ததாக பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மத மோதலை உருவாக்க முயற்சி - பா.ஜ.க. எம்.பி மீது வழக்கு
Published on

மதத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவினர் இடையே மோதலை உருவாக்க முயற்சித்ததாக பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரத்தைச் சேர்ந்த குட்டிபுரம் பஞ்சாயத்தில் வசிக்கும் இந்துக்கள் ஆதரித்ததால் குடிநீர் வழங்க மறுத்ததாக கடந்த 22ஆம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே பதிவிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை குட்டிபுரம் பஞ்சாயத்து, மறுத்துள்ள நிலையில், பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com