ஜாமியா பல்கலை நூலகத்தில் போலீஸ் தாக்குதல் - சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ

டெல்லி ஜாமியா பல்கலை நூலகத்தில் போலீசார் மாணவர்களை தாக்கிய காட்டிச்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜாமியா பல்கலை நூலகத்தில் போலீஸ் தாக்குதல் - சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ
Published on

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த மாதம் 15 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டபோது பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதாக தகவல் வெளியாகி சர்ச்சையானது. இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி பதிவு தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com