சினிமா பாணியில் சம்பவம் செய்த ஜோடி-ஏர்போர்ட்டில் அதிர்ச்சி
உடையில் தங்க பேஸ்ட் - துபாயில் இருந்து 28 கிலோ தங்கம் கடத்தல்
குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் துபாயில் இருந்து சினிமா பாணியில் ஆடையில் மறைத்துவைத்து 28 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு கடத்தி வந்த தம்பதியினரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் அவர்களின் உடைமைகளை சோதனை செய்த போது அதில் சில கிராம் தங்கம் கிடைத்துள்ளது. தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் அவர்கள் உடுத்தியிருந்த ஆடையின் பல்வேறு பகுதிகளில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து 28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
