இளம்பெண்களிடம் காதலிப்பதாக கூறி மிரட்டி பணம் பறித்த நடன இயக்குநர் கைது...

x

kerala || Arrest இளம்பெண்களிடம் காதலிப்பதாக கூறி மிரட்டி பணம் பறித்த நடன இயக்குநர் கைது...

கேரளாவில், பல இளம் பெண்களை காதலிப்பதாக கூறி, அவர்களை மிரட்டி பணம், நகைகளை பறித்த புகாரில் மாடலிங் நடன இயக்குநர் வாஹித் கைது செய்யப்பட்டார். கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இவர், சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு, காதலிப்பது போல் நடித்து, அவர்களிடம் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து திருவனந்தபுரம் டெக்னோ பார்க் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வாஹித்தை கைது செய்து, அவரது செல்போன்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்பில் இருந்த பெண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்