தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை - சித்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகனுக்கு, சித்தூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை - சித்தூர் நீதிமன்றம் தீர்ப்பு
Published on
பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகனுக்கு, சித்தூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சித்தூரில் உள்ள சிவனி குப்பம் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று, குடிக்க பணம் தராத தாயை கழுத்தை நெரித்து மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு, சித்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி கபர்த்தீ, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com