Puducherry | Boys | 'மாஸ்டர்' பிளான் போட்டு எஸ்கேப்பான சிறுவர்கள் பிடித்து உள்ளே தள்ளிய போலீசார்
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பிச் செல்ல திட்டம் தீட்டிய சிறுவர்கள் 3 பேர், பாதுகாவலரை வெளியே அனுப்ப அதிகப்படியான சத்தத்தை எழுப்பியுள்ளனர். இதையடுத்து, பாதுகாவலர் வெளியே சென்றதை பயன்படுத்தி,
3 சிறுவர்களும் பின்புற சுவர் வழியாக தப்பிச் சென்றனர். இதையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார், 3 பேரில் இருவரை பிடித்து சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். தலைமறைவான மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.
Next Story
