child | sewer விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நிகழ்ந்த சோகம்
கழிவுநீர் கால்வாயில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி
டெல்லியில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்ததாக தெரிகிறது.
பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
