Crowd கூட்டத்தில் சிக்கி கதறிய குழந்தை - ``அங்க பாருடா சனி பகவான’’.. தெய்வமாக வந்த பெண் போலீஸ்

கூட்டத்தில் சிக்கி கதறிய குழந்தை - ``அங்க பாருடா சனி பகவான’’.. தெய்வமாக வந்த பெண் போலீஸ்

Crowd கூட்டத்தில் சிக்கி கதறிய குழந்தை - ``அங்க பாருடா சனி பகவான’’.. தெய்வமாக வந்த பெண் போலீஸ்

#purataasi #thirunallar #sanibagavantemple

புரட்டாசி 3-வது சனிக்கிழமை - திருநள்ளாறு கோவிலில் குவிந்த பக்தர்கள் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை, தொடர் விடுமுறை காரணமாக, காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். நளதீர்த்தக் குளத்தில் புனித நீராடி, கலிதீர்த்த விநாயகரை வழிபட்டு, சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com