Chhattisgarh | சுரங்க விரிவாக்க பணி..போலீசார் மீது கல்வீச்சு..; சத்தீஸ்கரில் வெடித்த வன்முறை
நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு - போராட்டத்தில் வெடித்த வன்முறை
சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடிய கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக 2016ம் ஆண்டே நிலம் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலத்தை கையகப்படுத்தும் பணியின் போது பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், கிராம மக்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சில காவல்துறையினர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
