Chhattisgarh | சடலத்தை புதைக்கும் நேரத்தில் உயிருடன் வீட்டிற்குள் உட்கார்ந்திருந்த உருவம்

x

சத்தீஸ்கரில் இறந்ததாக நினைத்த நபர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சூரஜ்பூரில் புருஷோத்தம் என்பவர் காணாமல் போனதாக உறவினர்கள் போலீஸில் புகாரளித்தனர். இந்நிலையில் அதேபகுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் இளைஞரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். புருஷோத்தமின் உறவினர்களும் இறந்தது அவர் தான் என அடையாளம் காட்டியதால், உடலை அடக்கம் செய்யும் பணியை தொடங்கினர். அப்போது அங்கு வந்த ஒருவர் புருஷோத்தம் உயிருடன் வந்து வீட்டில் அமர்ந்திருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, புருஷோத்தம் உயிருடன் இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து இறந்தவர் குடும்பத்தினர் வந்து அடையாளம் காட்டினால், புதைக்கப்பட்டவரின் உடல் தோண்டி விசாரணை நடத்தப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்