Chattisgarh Flood | அப்பா, அம்மா முன்னே துடிதுடித்து இறந்த 2 குழந்தைகள் - குலைநடுங்கவிடும் அதிர்ச்சி வீடியோ

x

சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், காரில் ஒரு கால்வாயைக் கடக்க முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராய்ப்பூர் பகுதியில் ஒப்பந்ததாராக பணியாற்றிய திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் தனது மனைவியான பவித்ரா, மகள்களான 7 வயது சௌஜைன்யா (Saujainya) மற்றும் 4 வயது சௌமியா ஆகியோருடன் பஸ்தர் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார். இந்த நிலையில், வெள்ளத்தில் 4 பேரும் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அவர்களுடன் சென்ற ஓட்டுனரான லாலா யாது (Lala Yadu) மரக்கிளையைப் பிடித்தபடி உயிருக்கு போராடிய நிலையில், உயிருடன் மீட்கப்பட்டார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜேஷ்குமாரின் சொந்த ஊரில், அவரது உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... உடல்களை விரைந்து கொண்டுவர நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்