``இந்த போன் கால் வந்தால் மக்களே உஷார்'' | எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம் போலீசார்
சாட்போட்கள் குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாட்போட்கள் மென்பொருள்களால் உருவாக்கப்பட்ட தானியங்கி செயல்தளங்களாகும். வேலை தொடர்பாகவோ, இதர விசயங்கள் தொடர்பாகவோ வரும் செல்போன் அழைப்புகள் மனிதர்களை போலவே பேசும் சாட்போட்டுகளாக இருக்கலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இதன் மூலமாக மக்கள் சுலபமாக ஏமாறும் வாய்ப்புள்ளது. URL, விரைவான பதில்கள், தவறான லிங்குகள் உள்ளிட்டவற்றை மிக கவனமாக கையாள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்களுக்கு சைபர் க்ரைம் உதவிக்கு1930 எண்ணையோ அல்லது இணையதள முகவரியையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
