நாளை விடிந்தால் வரப்போகும் மாற்றங்கள் - ரயில் பயணிகளே முக்கியமா தெரிஞ்சிக்கோங்க

x

நாளை விடிந்தால் வரப்போகும் மாற்றங்கள் - ரயில் பயணிகளே முக்கியமா தெரிஞ்சிக்கோங்க

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஜூலையில் இருந்து நீங்க செய்ய வேண்டியது என்ன? ரயில்வே துறையில புதுசா என்ன மாற்றங்கள் அமலுக்கு வருது, இன்னும் என்னென மாற்றங்கள் வரபோகுதுன்னு

இப்ப நாம விரிவா பார்க்கலாம்.

அதாவது தட்கல் முறையில் ரயில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலயும், பயணிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலயும்ம், ரயில்வே சில முக்கிய மாற்றங்களை அறிவிச்சுருக்கங்கா. .

ஆன்லைன் தட்கல் முறையிலான பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.

அதாவது 2025 ஜூலை 1 முதல் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் தட்கல் முறையில பயணச் சீட்டுகளை ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலமா முன்பதிவு பயணச் சீட்டுகள் தொடர்பான தவறான பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்று சொல்றாங்க..

2025 ஜூலை 15 முதல் ஆன்லைன் மூலமா தட்கல் பயணச் சீட்டு முன்பதிவுகளுக்கு ஆதார் அடிப்படையிலான OTP எண் அங்கீகாரம் வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாற்றமா இப்ப ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்கும் பணியிலயும் மாற்றத்த கொண்டு வந்திருக்காங்க ரயில்வே துறை. அதாவது தற்போதைய இருக்க நடைமுறை பயணிகளின் மனதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குது அப்டிங்குறதால இனி ரயில் முன்பதிவு அட்டவணை (Reservation Chart) 8 மணி நேரத்திற்கு முன்னடியே தயார் செய்ய இருக்காங்க அதுவும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருது. குறிப்பாக தொலைதூர இடங்கள் அல்லது முக்கிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளிலிருந்து நீண்ட தூர ரயில்களைப் பிடிக்க பயணிக்கும் பயணிகளுக்கு இது பயனளிக்கும்னும் சொல்லபடுது. காத்திருப்புப் பட்டியலில் இருக்க டிக்கெட் உறுதிப்படுத்தப்படாவிட்டால் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கு இது அதிக நேரத்தை வழங்கும் அப்டின்னும் சொல்றாங்க.

உதாரணத்திறுகு இப்ப மதியம் 2 மணிக்கு முன் புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு விளக்கப்படம் முந்தைய நாள் மாலை 9 மணிக்கு தயாரிக்கப்படும்.அப்டின்னா இது ரயில் பயணிகளுக்கு உகந்ததா தானே இருக்கும்.

சரி அடுத்த வர மாற்றம் என்ன அப்டின்னா ஒரு நிமிடத்தில் ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் வரை புக் செய்யும் வசதி அறிமுகம் செய்ய இருக்காங்க..

அதாவது ரயில்வே முன்பதிவு முறையான (PRS) Passenger Reservation System டிசம்பர் மாதத்திற்குள் மாற்றியமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. புதிய PRS மூலம் ஒரு நிமிடத்தில் 1.5 லட்சம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இப்போது ஒரு நிமிடத்தில் 32,000 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆனா இதுக்கு அப்புறம் 1.5 லட்சம் 1.5 லட்சம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இது தற்போதைய சூழலை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம்.

அடுத்தாதா இந்த புதிய பயணிகள் முன்பதிவு திட்டத்தின் மூலம் டிக்கெட் சரிபார்ப்பு, டிக்கெட் பற்றிய தகவல்களை ஒரு நிமிடத்தில் 4 லட்சம் என்ற அளவில் இருந்து 40 லட்சமாக உயர்த்த முடியும் அப்டின்னும் சொல்லபடுது. இந்த புதிய முறையில் பல மொழிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

ரயில்வே துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிறைய மாற்றங்கள் அமலுக்கு வரும் போது பயணிகளுக்கு சிறப்பான அனுபவமாக இருக்கும். டிக்கெட் முன் பதிவு செய்யும் போது பயனர்களுக்கு எளிதாக, விரைவான சேவையை வழங்கும் போது டிக்கெட் முன் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும்.

தட்கல் முறையில் முன் பதிவு செய்யும் போது ஏற்படும் சில தொழில்நுட்ப சிக்கல்களும் சரி செய்யப்படும் பட்சத்தில் பயணிகள் நல்ல அனுபவத்தை பெறுவார்கள்.

இனி வரக்கூடிய "புதிய PRS முன்பதிவு முறையில பயணிகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேர்வு செய்யும் நடைமுறையும் பரிந்துரையில் உள்ளது. அதற்கான கட்டண விவரங்களையும் பார்க்கலாம் என்று ரயில்வே துறை தரப்புல இருந்து தகவல் வெளியாகியிருக்கு.

தொடர்ந்து ரயில்வே முன்பதிவுல வர இந்த மாதிரியான மாற்றங்கள் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் அப்டிங்குறதுல எந்த சந்தேகமும் இல்ல.


Next Story

மேலும் செய்திகள்