"சந்திராயன் 3 திட்டம் இந்தாண்டு செயல்படுத்த முடியாது" - இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

கொரோனா எதிரொலியாக ககன்யான் மற்றும் சந்திராயன் 3 திட்டங்களை திட்டமிட்டபடி இந்த ஆண்டு செயல்படுத்த முடியாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
"சந்திராயன் 3 திட்டம் இந்தாண்டு செயல்படுத்த முடியாது" - இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு
Published on

கொரோனா தொற்றின் எதிரொலியாக நாடு முழுவதும் முடக்கப்பட்ட நிலையில், அதன் பாதிப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திலும் எதிரொலித்துள்ளது. இஸ்ரோவின் முக்கிய திட்டங்களாகயிருந்த ககன்யான் மற்றும் சந்திராயன் 3 ஆகிய திட்டங்கள் செயல்படுத்துவதில் 6 மாதம் வரை கால தாமதம் ஏற்படலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் 2021ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்த இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் வியோம் மித்ர் ரோபோவை கொண்டு ககன்யான் திட்டத்தின் சோதனைகள் நடத்தப்பட இருந்தது. ஆனால் ‌ தற்போதுள்ள சூழலில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் 5 முதல் 6 மாதம் வரை கால தாமதம் ஏற்படலாம் எனவும் இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com