Tirupati | சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி... திருப்பதி பிரம்மோற்சவத்தின் இறுதி நிகழ்வு

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி... திருப்பதி பிரம்மோற்சவத்தின் இறுதி நிகழ்வு

#tirupati | #Brahmotsavam

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி... திருப்பதி பிரம்மோற்சவத்தின் இறுதி நிகழ்வு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி பிரம்மோற்சவம், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. கடந்த 12ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவத்தையொட்டி, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில், உற்சவ மூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வார் வராக சுவாமி கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

X

Thanthi TV
www.thanthitv.com