உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் : நேரலை ஒளிபரப்பு செய்ய மத்திய அரசு சம்மதம்

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் : நேரலை ஒளிபரப்பு செய்ய மத்திய அரசு சம்மதம்
Published on

இது தொடர்பான பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் மனுதாரரின் கோரிக்கையை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளின் விசாரணையை தவிர, ஏனைய வழக்கு விசாரணையை நேரலை ஒளிபரப்பு செய்ய அரசு சம்மதம் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய நீதிபதிகள் தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப நேரலை ஒளிபரப்பு அவசியம் என குறிப்பிட்டனர்.

இதனை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அறிக்கையாக ஜூலை 23ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com