

மின்னணு பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், ரூபே டெபிட் கார்டு மற்றும் யு.பி.ஐ பரிவர்த்தனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளிட்டுள்ள உத்தரவில், ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் பரிவர்த்தனை கொண்ட நிறுவனங்கள் ரூபே டெபிட் கார்டு, யு.பி.ஐ. கியூ ஆர் கோடு வசதிகளை அளிக்க வேண்டியது கட்டாயம் என கூறியுள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்ள மின்னணு பண பரிவர்த்தனை வசதிகளை ஏற்படுத்தாத நிறுவனங்கள் மீது நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.