Central Government | social media | ``இது கட்டாயம்..'' சோசியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு உத்தரவு

``இது கட்டாயம்..'' சோசியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு உத்தரவு

``இது கட்டாயம்..'' சோசியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு #CentralGovernment #socialmedia #fakenews #thanthitv "போலி செய்திகளை உடனே நீக்குக" - சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் போராட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் சட்டவிரோதமான தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ​ சமீபகாலமாக போராட்டங்கள் பற்றி தவறான தகவல்களும், போலி புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் பரப்பப்பட்டு வருவதாகவும், இதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. ​எனவே, அரசு சுட்டிக்காட்டும் போலிப் பதிவுகளை தாமதிக்காமல் உடனடியாக நீக்க வேண்டும் என்று சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக, ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மீது, அதனை குறிப்பிட்டு 'Watermark' வைப்பதைக் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது....

X

Thanthi TV
www.thanthitv.com