9.2 லட்சம் சிம் கார்டுகளை பிளாக் செய்த மத்திய அரசு - அதிர்ச்சி காரணம்.. உஷார் மக்களே
இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் சைபர் மற்றும் ஆன்லைன் மோசடியில் சுமார் 22 ஆயிரம் கோடிகளை இந்தியர்கள் இழந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவாகிய ஏழாயிரத்து 465 கோடியை விட 206 சதவீதம் அதிகம். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், கடந்த ஆண்டு மட்டும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தில் 36 லட்சத்து 37 ஆயிரம் சைபர் மோசடி புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் , புகார்களின் அடிப்படையில் இதுவரை 9.2 லட்சம் சிம் கார்டுகள் மற்றும் 2.63 லட்சம் IMEI நம்பர்களை மத்திய அரசு பிளாக் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story
