"வங்கிகள் விடுமுறை என்ற தகவல் உண்மையில்லை" வதந்திகளை நம்ப வேண்டாம் - மத்திய அரசு அறிவிப்பு

செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"வங்கிகள் விடுமுறை என்ற தகவல் உண்மையில்லை" வதந்திகளை நம்ப வேண்டாம் - மத்திய அரசு அறிவிப்பு
Published on

கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட காரணங்களால் செப்டம்பர் முதல் வாரம் வங்கிகள் இயங்காது என சமூக வலைத்தளங்களில்

செய்திகள் வந்தது. இந்த நிலையில் இந்த செய்திகளில் உண்மையில்லை என்றும் யாரும் அதை நம்ப வேண்டாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வரும் 2ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மட்டுமே விடுமுறை என்றும், 3ஆம் தேதியான திங்கட்கிழமை சில மாநிலங்களில் மட்டுமே விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 8ஆம் தேதி

இரண்டாம் சனிக்கிழமையன்று மட்டுமே விடுமுறை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் கூட அனைத்து

ஏடிஎம்களும் செயல்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com