

புதுச்சேரியில் பெய்த கனமழை வெள்ள சேதங்களை பார்வையிட வரும் திங்கள் கிழமை மத்திய குழு வர இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரியில் 2 முறை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அதன் மூலம் பெய்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது. இதையடுத்து மீனவ கிராமங்களில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, மாவட்ட ஆட்சியர் பூர்வாகர்க், எம்.எல்.ஏ கல்யாண சுந்தரம் மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, திங்களன்று வரும் மத்திய குழுவிடம், சேத விபரங்கள் மதிப்பீடு செய்து சமர்ப்பிக்கப்படும் என்றார்.