நிலுவை ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க ரூ. 10 லட்சம் லஞ்சம் : மத்திய ஆயுஷ் அமைச்சக அதிகாரி கைது

நிலுவையிலுள்ள ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மத்திய ஆயுஷ் அமைச்சக அதிகாரியை சி.பி.ஐ. போலீசார் கைதுசெய்தனர்.
நிலுவை ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க ரூ. 10 லட்சம் லஞ்சம் : மத்திய ஆயுஷ் அமைச்சக அதிகாரி கைது
Published on

மத்திய 'ஆயுஷ்' அமைச்சகத்தில் சார்பு செயலாளராக பணியாற்றி வருபவர் ஆர்.கே.காத்ரி. இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார். இந்நிலையில், நிலுவையில் உள்ள ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்குமாறு மருந்து பொருட்களை விற்பனை முகவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு 10 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறு ஆர்.கே. காத்ரி கேட்க, அந்த முகவர் சி.பி.ஐ-யிடம் புகார் அளித்துள்ளார். ரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்ட ஆர்.கே.காத்ரியை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com