Police | Dismiss | ஆதாரத்துடன் வெளியான பகீர் CCTV - உடனே ஏஎஸ்பி டிஸ்மிஸ்
Police | Dismiss | ஆதாரத்துடன் வெளியான பகீர் CCTV - உடனே ஏஎஸ்பி டிஸ்மிஸ் #MadhyaPradesh #police #cctv #dismiss #thanthitv மத்தியப் பிரதேசத்தில், விடுதியில் தங்கியிருந்த காதல் ஜோடியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க மறுத்ததால், இளைஞரின் பையில் கஞ்சா வைத்து பொய் வழக்கில் சிக்க வைக்க முயன்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சியோனி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில், ஏஎஸ்பி தீபக் மிஸ்ரா தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, பெற்றோரிடம் பேச மறுத்த இளம்பெண்ணால் ஆத்திரமடைந்த ஏஎஸ்பி, இளைஞரின் பையில் கஞ்சா வைக்க உத்தரவிட்டது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும், காவல்துறையினர் மாதம் 25 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டதாக விடுதி உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார். வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, ஏஎஸ்பி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
