CBSE | மும்மொழி கொள்கை காரணமாக CBSE பள்ளிகளில் `முக்கிய’ மொழி நீக்கப்படும் அபாயம்
CBSE | மும்மொழி கொள்கை காரணமாக CBSE பள்ளிகளில் `முக்கிய’ மொழி நீக்கப்படும் அபாயம்
புதுச்சேரி சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழிக்கு சிக்கல் மத்திய அரசின் புதிய மும்மொழி கொள்கை காரணமாக, புதுச்சேரி சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடம் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது சிபிஎஸ்இயின் புதிய விதிமுறைப்படி, 2026-27 கல்வியாண்டு முதல் மாணவர்கள் இரண்டு இந்திய மொழிகளைக் கற்பது கட்டாயமாக்கப்படுகிறது இதில் ஆங்கிலம் ஒரு வெளிநாட்டு மொழியாகக் கருதப்படுவதால், மாணவர்கள் ஆங்கிலத்தைத் தேர்வு செய்தால் பிரெஞ்சு மொழியைத் தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே பிரெஞ்சு மொழியை இரண்டாம் பாடமாகப் பயின்று வரும் மாணவர்கள், இப்போது வேறு மொழிக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது புதுச்சேரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
