CBSC Exam | இரண்டு முறை பொதுத் தேர்வு... "எந்த தேர்வில் அதிக மார்க்கோ அதுவே இறுதி செய்யப்படும்"
முதல் கட்ட தேர்வை எழுதிய மாணவர்கள், மதிப்பெண்களை உயர்த்தும் நோக்கில் விருப்பத்தின் பேரில் இரண்டாம் கட்டத்தை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டாயம் இல்லை என்பதால், அதிக மதிப்பெண் பெற்ற தேர்வே இறுதியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு, இருமுறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
