சி.பி.ஐ. புதிய இயக்குனர் இன்று தேர்வு

சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சி.பி.ஐ. புதிய இயக்குனர் இன்று தேர்வு
Published on
சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுளை கூறியதால் இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் சிபிஐக்கு நிரந்தர இயக்குனரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது . சிபிஐ இயக்குனருக்கான பட்டியலில் 5 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இன்று பிரதமர் தலைமையில் மீண்டும் நடைபெறும் தேர்வு குழு கூட்டத்தில் யார் என இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com