கோடிகளில் சிக்கிய பணம்... கேசவ விநாயகத்தை விசாரிக்க CBCID முடிவு

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். பாஜக நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம் உட்பட 15-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற அனுமதியுடனே சம்மன் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சிபிசிஐடி தரப்பு தாக்கல் செய்த வழக்கில், ஒரு வாரத்திற்கு முன்பு சம்மன் வழங்கி விசாரணை செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் கேசவ விநாயகத்திற்கு சம்மன் அளித்து மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com