``உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு..?'' - சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு, தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாடை தடுக்க கோரி ரோஹித் வெமூலாவின் தாயார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந் நிலையில் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறத்தல், சாதிய பாகுபாட்டை தடுக்கத் தேவையான இறுதிப்படுத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க யூஜிசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
Next Story
