மின்வாரிய உதவி பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

x

தெலுங்கானா மாநிலத்தில் அரசு உதவி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்ராஹிம்பாக் பகுதியில் வசிக்கும் மின்வாரிய உதவிப் பொறியாளர் ஸ்ரீ அம்பேத்கர் எருகுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். அவரது பணிக்காலத்தில் சட்டவிரோத வழிகளில் சொத்துக்கள் சேர்த்தாரா என்ற புகாரின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள், ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்