Firecrackers| பட்டாசு வெடித்த 24 பேர் மீது பாய்ந்த வழக்கு
பட்டாசு வெடித்த 24 பேர் மீது பாய்ந்த வழக்கு
#firecrackers #puducherrypolice
புதுச்சேரி முழுவதும், அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்ததாக 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஒதுக்கிய நேரத்தைத் தாண்டி, பொது இடங்களில் பட்டாசு வெடித்ததாக 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
