பினராயி விஜயன் பற்றி விமர்சனம் - 119 பேர் மீது வழக்குப்பதிவு

பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமூக ஊடகங்களில் அவரை பற்றி விமர்சித்ததாக இதுவரை 119 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பினராயி விஜயன் பற்றி விமர்சனம் - 119 பேர் மீது வழக்குப்பதிவு
Published on
கேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமூக ஊடகங்களில் அவரை பற்றி விமர்சித்ததாக இதுவரை 119 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்ததாக 41 கேரள அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசுஆவணங்கள் கூறுகின்றன. நடவடிக்கைக்கு உள்ளான அரசு ஊழியர்களில் 12 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதாகவும் 29 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சமூக ஊடகங்களில் முதல்வருக்கு எதிராக கருத்து பதிவு செய்த 56 பேர் மீது 38 வழக்குகள் பதிவு செய்து, அதில் 26 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com