"போராட்டங்களை நிறுத்தினால் நாளை விசாரணை" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி

டெல்லி ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டங்களை நிறுத்தினால் நாளை இது தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"போராட்டங்களை நிறுத்தினால் நாளை விசாரணை" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி
Published on

ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டம் குறித்து, தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங் என்பவர், தலைமை நீதிபதி போப்டேவிடம் முறையிட்டார்.அப்போது டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டுள்ளதாகவும் சில மாணவர்களை காணவில்லை என்றும் கூறியிருந்தார். அப்போது பேருந்துகள் எரிப்பு போன்ற பொதுச்சொத்துகளை சேதப்படுத்தும் எந்தவொரு போராட்டத்தையும் அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என​வும் போராட்டங்களை நிறுத்தினால் இது தொடர்பான மனுக்களை நாளை விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி போப்டே கூறினார். மேலும் காயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் அறிவுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com