அரபிக்கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பல் - தற்போதைய நிலை?
மூழ்கத்தொடங்கிய சரக்கு கப்பல்... கேப்டன் உட்பட ஊழியர்கள் மீட்பு
அரபிக்கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பலில் இருந்து ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கப்பல் மீண்டும் மூழ்கத் தொடங்கியுள்ளது. கேரள கடலில் இருந்து 38 கடல் மைல் தூரத்தில், அரபிக் கடலில் லைபீரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் கவிழ்ந்தது. இதையடுத்து கப்பலில் இருந்த 21 ஊழியர்கள் கடற்படை கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். சரக்கு கப்பலின் நிலையை கண்காணிப்பதற்காக கேப்டன் உட்பட 3 பேர் கப்பலிலேயே தங்கிய நிலையில், கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியதால்
கேப்டன் மற்றும் இருவர் மீட்கப்பட்டனர்.
இதனிடையே, கடலில் விழுந்த கண்டெய்னர்களில் அபாயகரமான திரவங்கள் உள்ளடக்கிய பொருட்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில், திருச்சூர், ஆலப்புழா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கினால் அவற்றை பொதுமக்கள் தொட வேண்டாம் என கேரள மாநில பேரிடர் நிவாரண ஆணையம் தெரிவித்துள்ளது.
