உத்தரப்பிரதேசத்தில் கார் வாஷிங் சென்டர் உரிமையாளர் சுட்டுக்கொலை

உத்தரப்பிரதேசத்தில் கார் வாஷிங் சென்டர் உரிமையாளர் சுட்டுக்கொலை

உத்தரப் பிரதேசத்தில் பட்டப்பகலில் கார் வாஷிங் சென்டர் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.

ராம்பூர் மாவட்டம், மிலக் கானம் - பிலாஸ்பூர் சாலையில் உள்ள கார் வாஷிங் சென்டரில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள், நவ்ஜோத் சிங்கைக் கடையிலிருந்து வெளியே இழுத்து வந்து, அவரது நெஞ்சில் அடுத்தடுத்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நவ்ஜோத் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொடூரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாகக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் போலீசார், வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com