இந்தியாவில் கார்கள் விற்பனை உயர்வு

அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கார்கள் விற்பனை உயர்வு
Published on

அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. சென்ற வருட அக்டோபரை விட மாருதி சுசிக்கியின் விற்பனை 17 புள்ளி 6 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 63 ஆயிரம் கார்களாக அதிகரித்துள்ளது. ஹுன்டாய் நிறுவனத்தின் விற்பனை 13 சதவீதம் அதிகரித்து 56ஆயிரத்து 605 கார்களாக உயர்ந்துள்ளது, ஹோன்டா கார்கள் விற்பனை 8 புள்ளி3 சதவீதமும், டொயோட்டொ கிர்லோஸ்கர் கார்கள் விற்பனை 4 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்தியாவின்

மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவனத்தின் விற்பனை 35 சதவீதம் அதிகரித்து 8 லட்சத்து 6 ஆயிரம் வாகனங்களாக உயர்ந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com