மகனுடன் சேரில் இருந்த தாய் மீது ஏறிய கார்- நசுங்கி பலியான குழந்தை - நடுங்க விட்ட காட்சி

x

கேரளாவில், கார் சார்ஜிங் நிலையத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில், நாற்காலியில் தாயின் மடியில் இருந்த 4 வயது சிறுவன் உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவர், தனது மனைவி ஆர்யா மோகன் மற்றும் 4 வயது மகன் அயனுடன், இடுக்கி சுற்றுலா வந்த இடத்தில் கார் சார்ஜிங் நிலையத்தில், காருக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்தார். அப்போது,

அங்கு வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, நாற்காலியில் மகனுடன் அமர்ந்திருந்த ஆர்யா மோகன் மீது மோதியது. இதில், ஆர்யா மோகன் சுயநினைவின்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய மகன் அயன் பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த ஜெயகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்