லாரி மீது நேருக்கு நேராக மோதிய கார்... மின்னல் வேகத்தில் சிதறி உயிர் தப்பிய காட்சி

x

கேரள மாநிலம் கொல்லம் அருகே, அதிவேகமாக சென்ற கார் ஒன்று, டிப்பர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கல் சிங்கேரி பகுதியில் கொல்லத்திற்கு செல்லும் முக்கிய சாலை வழியாக வந்த கார் மற்றொரு காரை முந்திச் செல்ல முயற்சித்தது. அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்