வேகமாக மோதி ஏறி இறங்கிய கார் - முன்னாள் ராணுவ வீரர் பலி
ராஜஸ்தானில் கார் மோதி முன்னாள் ராணுவ கேப்டன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
ஜெய்பூரில் உள்ள வைஷ்ணோ நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ கேப்டனான நர்சராம் ஜஸ்டா
தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதி 10மீட்டர் தூரம் வரை தரதரவென இழுத்துச் சென்றது. இதில் நர்சராம் ஜஸ்டா சம்பவ இடத்திலேயே பலியானார். ஒரு பெண் காரை ஓட்டிச் செல்வதும் அவரது குழந்தை இருக்கையில் அமர்ந்திருந்ததும் சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்துள்ளது. விபத்து பதிவான அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகியுள்ளன..
Next Story
