Car Accident | சீறி வந்த வேகத்தில் பால கம்பிகளில் சொருகிய கார்.. துடிதுடித்து பலியான சோகம்
வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் - சுற்றுலா பயணி பலி
இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழந்துள்ளார்.
அடல் சுரங்கப்பாதை அருகே, மணாலியில் இருந்து லாஹுல் நோக்கிச் சென்ற கார், அதிவேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கட்டுமானத்தில் இருந்த பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ராஜஸ்தானை சேர்ந்த கைலாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
