இப்படியும் சாவு வருமா? - பெட்ரோல் போடும்போதே சரிந்து விழுந்து துடிதுடித்த நபர்

x

பெட்ரோல் பங்க்ல தனது வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பிக்கிட்டு இருந்த ஒருத்தர் திடீர்னு மயங்கி விழுந்து உயிரிழந்திருக்காரு... அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா சொல்றாங்க...

உத்தர பிரதேசத்தில் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி கொண்டு இருந்த போது, பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லலித்பூர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக ஒரே பைக்கில் இருவர் சென்றிருந்தார். அப்பொழுது, 45 வயதாகும் அந்த நபர், திடீரென பைக்கில் இருந்து கீழே விழுந்தார். மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்