ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டு தகராறு - பேக்கரிக்குள் புகுந்து சூறையாடிய கும்பல்

ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டு புதுச்சேரியில் உள்ள பேக்கரியை சூறையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டு தகராறு - பேக்கரிக்குள் புகுந்து சூறையாடிய கும்பல்
Published on

துபாய் ரிட்டர்ன் நபராக கிராமத்துக்குள் வந்த வடிவேலு, ஒட்டகப்பால் கேட்டு டீக்கடையில் ரகளையில் ஈடுபடும் காட்சியை போல நிஜத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது...

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ். மதிமுக பிரமுகராக உள்ளார். இவரது மருமகன் நாராயணன், புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் அரியாங்குப்பம் சாலையில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு இரவு நேரத்தில் வந்த 3 பேர், தங்களுக்கு ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் வேண்டும் என கேட்டுள்ளனர். விளையாட்டுக்கு தான் கேட்கிறார்கள் போல என நினைத்து உரிமையாளரும் இல்லை என கூற, அவர்களோ அதை கேட்கும் நிலையில் இல்லை.

ஒட்டக மில்க்கில் தான் மில்க் ஷேக் வேண்டும் என ரைமிங்காக கூறி அதகளம் செய்ய தொடங்கவே, நிலைமை சீரியஸானது. கடைக்காரர் சுதாரிப்பதற்குள் திடீரென அந்த 3 பேரும் கடையை சூறையாட தொடங்கினர்.

X

Thanthi TV
www.thanthitv.com