Marriage | Groom | கிப்ட் கொடுப்பது போல் வந்து மணமகனுக்கு சரமாரி கத்திக்குத்து
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில், மணமகன் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.அமராவதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு மேடையில் மணமக்கள் நின்றுகொண்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த இருவரில் ஒருவர், மேடை ஏறி வந்து, தான் கையில் வைத்திருந்த கத்தியால், மணமகன் சுஜல் ராம் சமுத்ராவை Sujal Ram Samudra பல முறை குத்தியுள்ளார். இதில் சுஜலின் தொடை மற்றும் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Next Story
