CAIIHM வேலைவாய்ப்பு முகாம் - 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

x

செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடிக்கவுள்ள 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், இந்தியா முழுவதும் உள்ள 19க்கும் மேற்பட்ட பைவ் ஸ்டார் ஹோட்டல்களும், ரிசார்ட்களும் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர். பங்கேற்ற பெரும்பாலான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சிலர் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில், 18 மாணவர்கள் மொரீஷியசில் உள்ள IHG, Long Beach, La Pirogue போன்ற பை-ஸ்டார் ஹோட்டல்களில் 50,000 மாத சம்பளத்துடன் வேலைக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு முகாமை நடத்த ஒத்துழைப்பு அளித்த ஆசிரியர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ள நிர்வாகம், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்