மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றார். அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் ஒரு கோடியே 13 லட்சம் குடும்பங்கள் பலனடையும் என்றும் அமைச்சர் கூறினார்.இதனால் அரசுக்கு கூடுதலாக 14 ஆயிரத்து 595 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com