அமிதாப், அமிர்கான் பயன்படுத்திய கார்களை வாங்கிய தொழிலதிபருக்கு ரூபாய் 38 லட்சம் அபராதம்..

x

அமிதாப், அமிர்கான் பயன்படுத்திய கார்களுக்கு ரூ.38 லட்சம் அபராதம்

பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமிர்கான் ஆகியோர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு, பெங்களூரு போலீசார் 38 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அமிதாப் பச்சன் மற்றும் அமீர் கான் ஆகியோர் பயன்படுத்திய இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை

பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் 'KGF பாபு' என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருந்தார். ஆனால், அந்த வாகனங்களுக்கு மாநில சாலை வரியை செலுத்தாததுடன், மீண்டும் பதிவு எண்ணை மாற்றாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தொழிலதிபருக்கு 38 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்