ராய்ப்பூர்||சத்தீஸ்கரில் குழந்தையுடன் நின்ற நபரை விரட்டி விரட்டி தாக்கிய காளை
சத்தீஸ்கரில் குழந்தையுடன் நின்ற நபரை விரட்டி விரட்டி தாக்கிய காளை
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், ஒரு வயது பேரக்குழந்தையை கையில் ஏந்தியபடி வீட்டின் வாசலில் நின்றிருந்த முதியவரை, காளை மாடு ஒன்று விரட்டி விரட்டி தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
டிடி நகர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தேவ்நாராயண் சர்மா என்பவர் குழந்தையை தூக்கிக்கொண்டு நின்றபோது, பின்னால் இருந்து வேகமாக வந்த காளை, அவர் மீது பாய்ந்தது. இதில் குழந்தை தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தது.
தொடர்ந்து முதியவரையும் காளை முட்டித் தள்ளியது. குழந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் காளை ஏற்கனவே அப்பகுதியில் பலரை தாக்கியதாக கூறப்படும் நிலையில், வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி காளையை பிடித்துள்ளனர்.
