இரண்டடுக்கு கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து - பக்கத்து வீட்டில் வசித்து வந்த தம்பதியினர் படுகாயம்

பெங்களூரு நகரின் ஆஸ்டியன் டவுன் பகுதியில் இரண்டடுக்கு கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டடுக்கு கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து - பக்கத்து வீட்டில் வசித்து வந்த தம்பதியினர் படுகாயம்
Published on

பெங்களூரு நகரின் ஆஸ்டியன் டவுன் பகுதியில் இரண்டடுக்கு கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ராஜூ என்பவர் இந்த இரண்டடுக்கு கட்டிடத்தை வாங்கியுள்ளார். இதனையடுத்து பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட திட்டமிட்டிருந்த நிலையில் அதிகாலையில் கட்டிடம் தானாகவே இடிந்து விழுந்தது. இந்த கட்டிடம் இடிந்ததில் பக்கத்து வீடு சேதமடைந்துள்ளது. இதனால் பக்கத்து வீட்டில் வசித்துவந்த தம்பதியினருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com