Building collapse | நொடியில் இடிந்து தரைமட்டமான கட்டிடம் - உள்ளே சிக்கி துடிக்கும் 16 உயிர்கள்
நொடியில் இடிந்து தரைமட்டமான கட்டிடம் - உள்ளே சிக்கி துடிக்கும் 16 உயிர்கள்
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் அந்த கட்டிடத்துக்குள் சிக்கி இருக்கும் 16 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிக்கு உட்பட்ட மோஷி பகுதியில் உள்ள கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி கிடங்கில் இந்த விபத்து நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் அதிதீவிர கனமழையால், அங்கு மலை போல் குவிக்கப்பட்டிருந்த கழிவுக் குவியல்கள் மாநகராட்சியின் சார்பில் அங்கு கழிவு மறுசுழற்சி பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தனியார் நிறுவனத்தின் 3 அடுக்கு நிர்வாக அலுவலக கட்டிடத்தின் மீது பலத்த சத்தத்துடன் விழுந்தது. இதனால் அந்த கட்டிடம் நொடிப் பொழுதில் முழுமையாக இடிந்து விழுந்தது. இதனால் கட்டிடத்தின் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 15க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி நிலையில், தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
