

வரும் நிதியாண்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு தொகையை குறைந்த பட்சம் பத்து சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், கடந்த நிதியாண்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு பட்ஜெட்டில் ஆயிரத்து 703 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயிரத்து 729 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதை கோபால கிருஷ்ணன் சுட்டிக்காட்டி உள்ளார். கடந்த நிதியாண்டை விட ஒன்றரை சதவீதம் அளவுக்கே கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.