தமிழகத்திற்குள் நுழைந்த குரூர வடமாநில கும்பல் - சட்டையை கழட்டி ஓடவிட்ட கேரள போலீஸ்

x

கார் திருட்டு புகார் - கேரளாவில் 3 ஏடிஎம் கொள்ளையர்கள் கைது?

கிருஷ்ணகிரியில் காரை கடத்திய வடமாநில கும்பல், கண்டெய்னர் லாரியுடன் கேரள போலீசாரிடம் சிக்கினர்.

குருபரப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் கார் காணாமல் போனது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், காணாமல் போன காரை பின் தொடர்ந்து ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட கண்டைனர் லாரி ஒன்றும் கோவை வழியாக கேரளாவிற்கு சென்றுள்ளது. கிருஷ்ணகிரி போலீசார் அளித்த தகவலின்படி, கேரள போலீசார் எர்ணாகுளம் அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது லாரியின் உள்ளே எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஸ் வெல்டிங் பொருட்கள் இருந்துள்ளன. இதையடுத்து ஹரியானாவை சேர்ந்த நசீர் அகமத், சாகித் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த சைக்குள் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டபோது, கிருஷ்ணகிரியில் காரை திருடியதை ஒப்பு கொண்டனர். இவர்கள் மூவரும் ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்